மதுரை கோட்டம் வெளியிட்ட அறிவிப்பு! இங்கு ரயில் சேவையில் மாற்றம்!

0
469
announcement-made-by-madurai-division-change-in-train-service-here
announcement-made-by-madurai-division-change-in-train-service-here

மதுரை கோட்டம் வெளியிட்ட அறிவிப்பு! இங்கு ரயில் சேவையில் மாற்றம்!

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு மக்கள் அனைவரும் கூட்ட நெரிசலில் செல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பேருந்து சேவையை முற்றிலும் தவிர்த்து ரயில் சேவையை விரும்புகின்றனர். அதனால் ரயில் சேவை படி படியா அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் பண்டிகை தினங்களில் தெற்கு ரயில்வே சார்பில் அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு கட்டண ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு பகுதிகளுக்கும் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கபடுகின்றது.

மேலும் கடந்த வாரங்களில் இருந்து தெற்கு ரயில்வே சார்பில் ஆங்காங்கே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றது. அதன காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஹோலி பண்டிகைக்காக கோராக்பூர்க்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றது.

இந்நிலையில் மதுரை கோட்ட ரயில்வேக்கு உட்பட்ட திருமங்கலம், திருப்பரங்குன்றம் மற்றும்  மதுரை ஆகிய ரயில் நிலையங்களில் அகலப்பாதை தண்டவாள இணைப்பு பணி நடைபெற்று வருகின்றது. அதன் காரணமாக அந்த பாதையில் ரயில்களின் போக்குவரத்து சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் திருவனந்தபுரத்தில் இருந்து வரும் 27 ஆம் தேதி மதுரை புறப்படும் அம்ரிதா எக்ஸ்பிரஸ் வண்டி எண் 16343 திண்டுக்கல் ரயில் நிலையம் வரை மட்டுமே செல்லும். மறுமார்க்கமாக மதுரை திருவனந்தபுரம் அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண் 16344 வரும் 28 ஆம் தேதி மதுரையில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 5.05 மணிக்கு திருவந்தபுரம் புறப்பட்டு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous article18 தேதி இங்கு உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!
Next articleகுரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட்! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here