ஈரோடு இடைத்தேர்தலில்  தேர்தல் ஆணையம் போட்ட திடீர் உத்தரவு! புகாரின் பேரில் அதிரடி! 

0
393
#image_title

ஈரோடு இடைத்தேர்தலில்  தேர்தல் ஆணையம் போட்ட திடீர் உத்தரவு! புகாரின் பேரில் அதிரடி! 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டதால் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் தயார் செய்யப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் செய்யப்பட்டிருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பை சேர்ந்த சி.வி.சண்முகம் இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்திருந்தார்.

டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம் அவர் அளித்திருந்த புகாரில் குறிப்பிட்டிருப்பதாவது,

ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான பெயர்கள் அந்த தொகுதிக்கு தொடர்பு இல்லாதவர்கள் என்றும்,  மேலும் 8,000க்கு மேற்பட்டோரின் பெயர்கள் இரண்டு முறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே இது குறித்து முறையான அறிக்கை தயார் செய்து தாக்கல் செய்யுமாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாகுவிற்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

அந்த கடிதத்தை தலைமை அதிகாரி சத்யபிரதா சாகு, மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அனுப்பிவைத்து இருக்கிறார். இந்த புகார் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி அனுப்பக்கூடிய விரிவான அறிக்கையை தலைமை அதிகாரி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப இருக்கிறார். 

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் விதிமீறல்கள் பல இருப்பதாகவும் வாக்காளர் பட்டியலில் முறைகேடு இருப்பதாகவும் அதிமுக கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous articleசென்னை வாசிகளுக்கு குட் நியூஸ்.. இனி மூன்றுக்கும் ஒரே டிக்கெட் தான்!! முதல்வரின் மாஸ் நடவடிக்கை!!
Next articleமின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லையா? அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!