பெட்ரோலிய பொருட்கள் GST வரம்புக்குள் கொண்டுவரப்படும்-நிர்மலா சீதாராமன்! 

0
285
#image_title

பெட்ரோலிய பொருட்கள் GST வரம்புக்குள் கொண்டுவரப்படும்-நிர்மலா சீதாராமன்! 

மாநில அரசுகள் சம்மதித்தால் ஜி.எஸ்.டி வரம்புக்குள் பெட்ரோலிய பொருட்கள் கொண்டுவரப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பெட்ரோலிய பொருட்கள், மதுபானம் உள்ளிட்ட சில பொருட்கள் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரப்படவில்லை. முன்பு இருந்ததை போலவே உற்பத்தி வரி, உபரி வரி உள்ளிட்ட வரிகள்தான் விதிக்கப்பட்டு வருகின்றன.பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைக்க அவற்றை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநில அரசுகள் சம்மதம் தெரிவித்தால், பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர முடியும். மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிறோம். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்துமாறு கூறி வருகிறோம். தற்போது தாக்கல் செய்யப்பட்ட 2023-2024 நிதியாண்டு பட்ஜெட்டில் மூலதன செலவுகள் 33% அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.10 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 

 

Previous articleவெற்றி நடை போடுமா இந்தியா? நாளை இரண்டாவது டெஸ்ட் தொடக்கம்!
Next article10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் நாளை வெளியீடு!