ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு! அக்னி வீர்களுக்கான தேர்வு!
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் முப்படைகளில் ஆள் சேர்க்க வேண்டும் என புதிய திட்டமான அக்னிபத் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் படுத்தினார். புதிய வேலைவாய்ப்பு முறைக்கு அக்னிபத் என்று பெயர் வைக்கப்பட்டது. அக்னிபத் திட்டத்தில் சேர்வதற்கு வீரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். அவர்களுடைய வயது 17 1/2 முதல் 21 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மேலும் அவர்கள் வேலையில் சேர்ந்து ஆறு மாத காலம் அடிப்படை பயிற்சிகள் மேற்கொள்ளுவார்கள். பயிற்சி காலம் முடிந்த பிறகு நான்கு ஆண்டுகளுக்கு பணிபுரியலாம். அந்த நான்கு ஆண்டுகளில் அவர்கள் நிரந்தர அக்னிபத் வீரர்க்கு விண்ணப்பிக்கலாம். அதில் 25 சதவீத வீரர்கள் மட்டுமே பணி அமர்தப்படுவார்கள். மீதமுள்ள 75 சதவீத வீரர்கள் சேவா நிதி கொடுத்து திருப்பி அனுப்பப்படுவார்கள். அந்த 75 சதவீத வீரர்கள் மீண்டும் முப்படைகளில் சேர முடியாது என அறிவிக்கப்பட்டது.
மேலும் நடப்பாண்டில் ஜூலை மாதம் அக்னி வீரர்களின் முதல் அணி தயாராகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்னி வீரர்கள் தேர்வு செய்யும் முறைகளில் அண்மையில் தான் மாற்றம் ஏற்பட்டது. அந்த வகையில் இறுதியில் நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வு முதலில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் நுழைவுத்தேர்வு, இரண்டாவதாக உடல்தகுதி தேர்வு, மூன்றவதாக மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த அக்னி வீரர்களுக்கு நடத்தப்படும் தேர்வு குறித்து நேற்று அறிவிப்பு ஒன்று வெளியானது. அந்த அறிவிப்பில் நேற்று முதல் வரும் மார்ச் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் வயது, உடல் தகுதி நிலை, கல்வித்தகுதி மற்றும் பிற தகுதிகளை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம் என ராணுவ அமைச்சகம் அறிவித்துள்ளது. அக்னி வீரர் தேர்வின் முதல்படி பொது தேர்வு வரும் ஏப்ரல் 17 முதல் 30 ஆம் தேதிக்குள் நாடு முழுவதும் சுமார் 180 மையங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.