பத்தாம் வகுப்பு மாணவர்களா நீங்கள்? உங்களுக்காக தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

0
236
#image_title

பத்தாம் வகுப்பு மாணவர்களா நீங்கள்? உங்களுக்காக தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

பத்தாம் வகுப்பு தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கான பெயர் பட்டியலை இன்று முதல் திருத்தம் செய்யலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தேர்வுத்துறைகளின்  இயக்குநர் சா.சேதுராம வர்மா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

நடப்பு கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற  மார்ச் மாதம் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வெழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் தேர்வுத்துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியிடப்பட்டது.  

அந்த  பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவ, மாணவிகளின் விவரங்களில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டி  இருப்பின்  தற்போது அவற்றை சரிசெய்து கொள்வதற்கு  இறுதிவாய்ப்பு வழங்கப்படுகிறது. எனவே, அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களும் இன்று பிப்ரவரி – 20 முதல் பிப்ரவரி 25-ஆம் தேதிக்குள் எமிஸ் தளம் வழியாக பெயர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ளலாம். இந்த பணிகளை தலைமை ஆசிரியர்கள் உரிய வழிமுறைகளை பின்பற்றி கூடுதல் கவனத்துடன் செய்து முடிக்க அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சரியான அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Previous article2 நிமிடத்தில் உங்களது வாயு தொல்லை நீங்க வேண்டுமா? இதோ உங்களுக்கான சூப்பர் டிரிங்! 
Next articleவாகன சோதனை செய்த காவலர்! வேகமாக வந்த இரு சக்கர வாகனத்தால் ஏற்பட்ட விபரீதம்!