திமுக ஆட்சிக்கு வந்தபின் நிறைவேற்றிய வாக்குறுதிகளை விட ரெட் ஜெயண்ட் மூவிஸ் ரிலீஸ் செய்த படங்களே அதிகம் – அண்ணாமலை காட்டம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் திமுக மற்றும் அதிமுக என இரு கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று அதிமுக வேட்பாளர் தென்னரசு அவர்களை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது வாக்காளர்கள் மத்தியில் பேசிய அவர், கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக அளித்திருந்த வாக்குறுதிகளில் 49 மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.குறிப்பாக பெண்களுக்கான உரிமைத்தொகை,சமையல் எரிவாயு மானியம் என எதுவும் வழங்கப்படவில்லை .
இந்நிலையில் அதை கடந்த 22 மாதங்களுக்கும் சேர்த்து வழங்க திமுகவினரை வாக்காளர்கள் அனைவரும் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றால் தான் திமுக அளித்திருந்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றிய வாக்குறுதிகளை விட ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்ட திரைப்படங்களின் எண்ணிக்கை தான் அதிகமானது என்று விமர்சித்து பேசியினார்.ஆட்சிக்கு வந்த திமுக இதுவரை 49 வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளது. ஆனால் இந்த ஆட்சிக் காலத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் 60 படங்களுக்கு மேல் ரிலீஸ் செய்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.