கோலிக்குப் பதில் ரோஹித் ஷர்மா:மீண்டும் அணியில் பண்ட்!மாற்றங்களோடு களமிறங்கும் இந்தியா !

0
195

கோலிக்குப் பதில் ரோஹித் ஷர்மா:மீண்டும் அணியில் பண்ட்!மாற்றங்களோடு களமிறங்கும் இந்தியா !

நியுசிலாந்துக்கு எதிரான கடைசி டி 20 போட்டியில் இந்திய அணி சில மாற்றங்களோடு களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 4 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதனால் இன்று நடக்கும் 5 ஆவது போட்டியில் இந்திய அணி மாற்றங்களோடு களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரோஹித் கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல சென்ற போட்டியில் ஓய்வளிக்கப்பட்ட முகமது ஷமி அணிக்குள் வந்து அவருக்குப் பதிலாக பூம்ராவுக்கு ஓய்வளிக்கப்படும் எனத் தெரிகிறது.

அதே போல ஆஸ்திரேலியாவுக்கு எதிரானத் தொடரில் தலையில் அடிபட்டு கன்கஷன் ஏற்பட்ட இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அணியில் இருந்து வெளியேறிய ரிஷப் பண்ட்டுக்கும் இந்த போட்டியில் வாய்ப்பளிக்கப்படும் எனத் தெரிகிறது. ஒருவேளை அவர் அணிக்குள் வந்தால் கே எல் ராகுல் அமரவைக்கப்படுவார் எனத் தெரிகிறது.

இதே போல நியுசிலாந்து அணியிலும் கடந்த போட்டியில் விளையாடாத கேப்டன் கேன் வில்லியம்ஸன் அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியாவது இந்த போட்டியில் வெற்றி பெற்று வொயிட்வாஷ் ஆவதில் இருந்து தப்பிக்க நியுசிலாந்து அணி கடுமையாக முயற்சி செய்யும் எனத் தெரிகிறது.

Previous articleஎன்ன பட்ஜெட் போட்டிங்க..? தமிழ்நாட்டுக்கு கால்கிலோ அல்வாதானா! ஸ்டாலின் விமர்சனம்..!!
Next articleஸ்மார்ட்போன்களைத் தாக்கும் கொரோனா ’வைரஸ்’!ஹேக்கர்கள் கைவரிசை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here