சொதப்பிய நடுவரிசை பேட்ஸ்மேன்கள்:களத்தில் இருந்து வெளியேறிய ரோஹித்:இந்தியாவுக்குப் பின்னடைவு !

0
119

சொதப்பிய நடுவரிசை பேட்ஸ்மேன்கள்:களத்தில் இருந்து வெளியேறிய ரோஹித்:இந்தியாவுக்குப் பின்னடைவு !

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது டி 20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்துள்ளது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 4 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து இன்று 5 ஆவது போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி கேப்டன் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டு ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். டாஸ் வென்ற அவர் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுலும் சஞ்சு சாம்சனும்  களமிறங்கினர். சாம்சன் 2 ரன்களில் அவுட் ஆகி வெளியேற அதன் பின் வந்த ரோஹித் ஷர்மாவும் ராகுலும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் இரண்டாவது விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்தனர். ராகுல் 45 ரன்களில் எதிர்பாராத விதமாக அவுட் ஆக, அதன் பின் ஸ்ரேயாஸ் ஐயர் வந்தார். ஒரு பக்கம் ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தாலும் ஸ்ரேயாஸ் ஆமை வேகத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் ரோஹித் ஷர்மா அடிபட்டு களத்தை விட்டு 61 ரன்களில் வெளியேறினார்.

அதன் பின்னர் வந்த ஷிவம் துபேவும் ஏற்கனவே களத்தில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயரும் ரன்களை சேர்க்க முடியாமல் தடவிக் கொண்டிருந்தனர். இதனால் ரன்ரேட்  குறைந்தது. ஒரு கட்டத்தில் ஷிவம் துபேவுக்குப் பின் வந்த மனிஷ் பாண்டே கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 3 பந்துகளில் 11 ரன்கள் சேர்க்க இந்திய அணி 163 ரன்கள் சேர்த்தது.  பொறுப்புக் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோஹித் காயமடைந்துள்ளதால் அவருக்குப் பதிலாக  கே எல் ராகுல் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

Previous articleநாட்டையே உலுக்கிய பிரியங்கா கொலை வழக்கு:உருவாகும் திரைப்படம்! முன்னணி இயக்குனர் அறிவிப்பு!
Next articleபூம்ரா துல்லிய தாக்குதல்:நியுசிலாந்தை வொயிட்வாஷ் செய்த இந்தியா!