பூம்ரா துல்லிய தாக்குதல்:நியுசிலாந்தை வொயிட்வாஷ் செய்த இந்தியா!

0
118

பூம்ரா துல்லிய தாக்குதல்:நியுசிலாந்தை வொயிட்வாஷ் செய்த இந்தியா!

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 ஆவது போட்டியையும் வென்ற இந்திய அணி நியுசிலாந்தை வொயிட்வாஷ் செய்துள்ளது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 4 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து இன்று 5 ஆவது போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி கேப்டன் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டு ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். டாஸ் வென்ற அவர் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார்.

இதில் இந்திய அணியின் ராகுல் (45) மற்றும் ரோஹித் ஷர்மா (61) ஆகியோர் மட்டுமே சிறப்பாக விளையாடியதால் இந்திய அணி 163 ரன்கள் மட்டுமே சேர்த்தது. கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோஹித் காயமடைந்துள்ளதால் அவருக்குப் பதிலாக  கே எல் ராகுல் கேப்டனாக செயல்பட்டார்.

இதையடுத்து 164 ரன்கள் என்ற இலக்கை துரத்திய நியுசிலாந்து அணியில் ஒருபுறம் விக்கெட்கள் விழுந்தாலும் மறுபக்கம் செய்பெர்ட்டும் ராஸ் டெய்லரும் நிதானமாக அரைசதம் அடித்து அந்த அணிக்கு நம்பிக்கை அளித்தனர். ஆனால் அவர்கள் இருவரும் அவுட் ஆனதை அடுத்து மளமளவென விக்கெட்கள் விழ ஆரம்பித்தது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் 4 ஓவரில் 3 விக்கெட்களை வீழ்த்தி 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதன் மூலம் நியுசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 156 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வி அடைந்தது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரின் அனைத்துப் போட்டிகளையும் வென்ற இந்திய அணி நியுசிலாந்தை வொயிட்வாஷ் செய்துள்ளது. இதையடுத்து இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி 5 ஆம் தேதி தொடங்க உள்ளது.

Previous articleசொதப்பிய நடுவரிசை பேட்ஸ்மேன்கள்:களத்தில் இருந்து வெளியேறிய ரோஹித்:இந்தியாவுக்குப் பின்னடைவு !
Next articleஹிப்ஹாப் ஆதியோடு லடாய்:அரண்மணை 3க்கு வேறு இசையமைப்பாளர் தேடும் சுந்தர் சி!