உதயநிதியை சுற்றிவளைத்து கேள்வி கேட்ட பெண்கள்! நொடியில் சமாளித்த உதயநிதி
ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி சார்பில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இந்த ஈரோடு கிழக்கு தேர்தல் தான் தற்போது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்து கொண்டிருந்த உதயநிதி ஸ்டாலினிடம் அப்பகுதியில் இருந்த பெண்கள் தேர்தல் வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றுவீர்கள் என்று கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர்.
இதனால் பதற்றம் அடைந்த உதயநிதி, சற்று சுதாரித்து லாவகமாக பேசி சமாளித்து விட்டார். இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் உதயநிதி பேசிக்கொண்டிருந்த போது திடீரென பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கிறதே அதற்கு முதலில் பதில் சொல்லுங்கள் என்று அங்கிருந்த பெண்கள் கேட்க ஆரம்பித்துவிட்டனர்.
இதனையடுத்து ஒரு நிமிடத்தில் சுதாரித்து விட்ட உதயநிதி, உங்களின் ஆதங்கம் எனக்கு நன்றாக புரிகிறது. இன்னும் 5 அல்லது 6 மாதங்களில் எல்லா வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார். அதன் பிறகு அந்த பெண்களும் சமாதானம் அடைந்தனர்.