ஓபிஎஸ்ஸின் பின்னடைவுக்கு காரணம் அவரா? இபிஎஸ்ஸின் ராஜ தந்திரமா?

0
317
O. Panneerselvam meeting with Edappadi Palaniswami? K. P. Krishnan's answer!!
O. Panneerselvam meeting with Edappadi Palaniswami? K. P. Krishnan's answer!!

ஓபிஎஸ்ஸின் பின்னடைவுக்கு காரணம் அவரா? இபிஎஸ்ஸின் ராஜ தந்திரமா?

அதிமுக ஓ பன்னீர் செல்வத்தின் கையை விட்டு போவதற்கு முக்கியமான காரணம் ஓ பன்னீர்செல்வம் எடுத்த சில முடிவுகள் தான் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஓபிஎஸ் எடுத்த சில தவறான முடிவுகள் தான் அவரது செல்வாக்கு மற்றும் ஆதரவு குறைவதற்கு முக்கிய காரணமாக இருந்தது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தின் இறுதி நாட்களில் மிகப் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்புக்கான இட ஒதுக்கீட்டில் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்த வன்னியர்களுக்கான தனி உள் ஒதுக்கீடு தென் மாவட்ட மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் தென் மாவட்டங்களில் அதிமுகவின் நிலைமை சற்று மோசமானது.

ஆனால் அதே நேரத்தில் மேற்கு மாவட்டங்களில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு இந்த உத்தி கை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அந்த தேர்தலில் போடி தொகுதியில் போட்டியிட்ட ஓ பன்னீர்செல்வமே மிகுந்த போராட்டத்திற்கு பிறகு தான் வெற்றி பெற்றார்.

2017 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஓ பன்னீர்செல்வம் சசிகலாவிற்காக விட்டுக் கொடுத்துவிட்டு அமைதியாக இருந்திருந்தால் சில ஆண்டுகளில் மீண்டும் ஓ பன்னீர்செல்வமே முதலமைச்சராக ஆகியிருக்கலாம். ஆனால் அவர் யார் பேச்சையோ கேட்டு தர்மயுத்தம் தொடங்கியதால் ஓ பன்னீர்செல்வத்திற்கு கிடைக்க வேண்டிய முதலமைச்சர் பதவி எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்து விட்டது.

அதன் பிறகு சரியாக காய் நகர்த்தி டிடிவி தினகரனை அதிமுகவிலிருந்து ஒதுக்கினார் எடப்பாடி பழனிசாமி. அடுத்ததாக சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலாவையும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளாமல் கட்சியை தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தார் எடப்பாடி பழனிசாமி. கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களின் எண்ணப் போக்கிற்கு ஏற்ற முடிவுகளை எடப்பாடி பழனிசாமி எடுத்து வந்தார்.

ஆனால் அப்போது துணை முதலமைச்சராக இருந்த ஓ பன்னீர்செல்வம் சற்று சுயநலமாக தன்னை பற்றி மட்டுமே யோசித்து முடிவுகளை எடுத்ததாக அப்போது பல விமர்சனங்கள் எழுந்தது. அதன் பிறகு அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. எடப்பாடி பழனிசாமிக்கான ஆதரவு மெல்ல மெல்ல அதிகரித்தது. சட்டசபை தேர்தலின் போது எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்த பல அதிமுக முக்கிய நிர்வாகிகள் கூறிய போது ஓ. பன்னீர்செல்வத்தால் ஒன்றும் செய்யவில்லை.

அதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் எடப்பாடி பழனிசாமிக்கு தான் வழங்கப்பட்டது மேலும் தேர்தலில் தோல்வியடைந்ததற்கான முக்கிய காரணம் இரட்டை தலைமை தான் என்று பரவலாக பேசப்பட்டது. இந்த காரணங்களால் ஓபிஎஸ் அதிமுகவினரின் ஆதரவை இழந்தார். அதன் பிறகு தற்போது ஓபிஎஸ் அதிமுகவையே இழந்து விட்டார்.