மாட்டு சாணமும் கோமியமும்தான் கொரோனாவுக்கு மருந்து:சொன்னது யார் தெரியுமா?

0
207

மாட்டு சாணமும் கோமியமும்தான் கொரோனாவுக்கு மருந்து:சொன்னது யார் தெரியுமா?

உலகம் முழுவதும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா வைரஸூக்கு மருந்தாக மாட்டு சாணத்தையும் அதன் சிறுநீரையும் பரிந்துரைத்துள்ளார் இந்து மகா சபா தலைவர் சுவாமி சக்ரபானி மகாராஜ்.

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் 259 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். 9000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க சீன மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வருகின்றனர். இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக உள்ளதாக சீன அரசு ஒத்துக்கொண்டுள்ளது. அதேபோல இந்த வைரஸ் எப்படி தோன்றியது என்றும் இதுவரைக் கண்டுபிடிக்கப்படவில்லை.

மக்களிடையே கொரோனா வைரஸ் பற்றிய பயம் உருவாகியுள்ள நிலையில் வைரஸுக்கு மருந்து என பல வைத்திய முறைகள் சொல்லப்பட்டு வருகின்றன. வழக்கம்போல சித்தாவில் மருந்து இருக்கிறது, ஆயுர்வேதத்தில் மருந்து இருக்கிறது என சொல்லப்பட்டு வரும் நிலையில் இப்போது புதிதாக ஒருவர் ஒரு மருந்தை சொல்லி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

கொரோனா வைரஸ் குறித்து இன்று பேசிய இந்து மகா சபா தலைவர் சுவாமி சக்ரபானி மகாராஜ் மாட்டின் கோமியம் கொண்டும் மாட்டின் சாணம் கொண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மாட்டின் சாணத்தை உடல்முழுவதும் பூசிக்கொண்டு யாகம் வளர்த்தால் மக்கள் இந்த நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றப் படுவார்கள் என சொல்லியுள்ளார்.

வழக்கம்போல பாஜக் ஆதரவாளர்கள் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவிக்க சமுக வலைதளங்களில் கண்டனங்களையும் கேலியையும் சந்தித்து வருகிறது இந்த கருத்து.

Previous articleஹிப்ஹாப் ஆதியோடு லடாய்:அரண்மணை 3க்கு வேறு இசையமைப்பாளர் தேடும் சுந்தர் சி!
Next articleபிரசாந்த் கிஷோருடன் திமுக கைகோர்ப்பு; ஸ்டாலின் முதல்வர் கனவை நிஜமாக்க டெக்னிக் அரசியல் ஆரம்பம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here