கடைகளில் அலைமோதும் இல்லத்தரசிகள்! தங்கத்தின் விலை குறைவு!
கொரோனா காலங்களில் மக்கள் ஏதேனும் ஒரு பொருளின் மீது முதலீடு செய்ய வேண்டும் என எண்ணி அனைவருமே தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கினார்கள். அதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்கத்தின் விலை ஏறு முகத்தையே சந்தித்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்த நிலையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக காணப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கடந்த இரண்டாம் தேதி வரலாறு காணாத அளவு தங்கத்தின் விலை உச்சம் பெற்றது. இந்நிலையில் கடந்த வாரங்களில் இருந்து தங்கத்தின் விலை கனிசமாக குறைந்து வருகின்றது. அந்த வகையில் நேற்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 5275 ரூபாய்க்கு விற்பனையானது. மேலும் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு பவுன் 42,200 ரூபாய்க்கும் விற்பனையானது.
மேலும் சென்னையில் தொடர்ந்து ஆபரண தங்கத்தின் விலை குறைந்து வருவதினால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து தங்கம் வாங்கி வருகின்றனர். இன்றைய நிலவரப்படி 22 கேரட் ஆபரம் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து 5245 ரூபாய்க்கு விற்பனையாகின்றது. ஒரு பவுனுக்கு 240 ரூபாய் குறைந்து ரூ 41,960 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.