இவர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு! அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!
இம்மாதம் முதல் நாளில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தலைமையில் காலை 11 மணியளவில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழு உருவாக்கியது.
இந்த பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும் அந்த பட்ஜெட்டில் வருவான வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கப்பட்டது. அதுபோலவே ஹரியானா மாநிலத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை மாநில முதல்வர் மனோகர் லால் கட்டால் தாக்கல் செய்தார்.
இவர் நிதி அமைச்சராகவும் தற்போது பொறுப்பு வகித்து வருகின்றார். மேலும் ரூ 1,83,950 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் இந்த பட்ஜெட் தாக்கல் என்பது முதல்வர் புதிதாக எந்த ஒரு வரியும் விதிக்கப் போவது இல்லை என அறிவித்தார்.
அதுமட்டுமின்றி ஓய்வூதியம் தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பின்படி சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்தை 2500 ரூபாய் இருந்து 2250 ஆக உயர்த்தி அறிவித்துள்ளார். மேலும் பசு பாதுகாப்பு ஆணையத்திற்கான நிதியை 40 கோடியிலிருந்து 400 கோடியாக உயர்த்தியும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.