ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் காலமானார்: காலை பிடித்து கதறி அழுத ஓபிஎஸ்!

Photo of author

By Parthipan K

ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் காலமானார்: காலை பிடித்து கதறி அழுத ஓபிஎஸ்!

Parthipan K

ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் காலமானார்: காலை பிடித்து கதறி அழுத ஓபிஎஸ்!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல்நலக்குறைவால் காலமானார். இவருக்கு வயது 95. கடந்த 2 நாட்களாக தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  

அவரது உடல்நிலையில் முன்னேற்றம் அடையாததால் நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ்ன் இல்லத்திற்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் அவரது இல்லத்தில் நேற்று இரவு உயிரிழந்தார்.

தாயார் மறைவு செய்தி கேட்டறிந்த ஓ.பன்னீர் செல்வம் அவசர அவசரமாக சென்னையிலிருந்து தேனி பெரியகுளத்திற்கு புறப்பட்டு சென்றார். தனது தாயாரின் முகம் பார்த்தும் காலை பிடித்து ஓ.பன்னீர்செல்வம் கதறி அழுதார்.

இந்நிலையில் ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.