சற்றுமுன்: மார்ச் மாதம் முதல் ரூ 1000.. மகளிருக்கு ஹாப்பி நியூஸ்!! ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய தகவல்!!
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரமானது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஆளும் கட்சி தனது கூட்டணி கட்சிக்கு ஆதரவளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது. மேலும் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் தனது கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து ஓட்டு போடும் படி முதல்வரே களத்தில் இறங்கி செயல்பட ஆரம்பித்தார்.
அதில், தற்பொழுது திமுக ஆட்சிக்கு வந்த கூறிய வாக்குறுதிகளில் 85 சதவீதம் நிறைவேற்றி விட்டதாகவும் மீதம் 15 சதவீதம் தான் நிறைவேற்ற வில்லை அதற்கான ஏற்பாடுகள் செய்து வருவதாகவும் கூறினார்.மேலும் மகளிர்க்கு கட்டணம் இல்லா பயண சீட்டு வழங்கும் திட்டம், இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்டவை குறித்து கூறி வாக்குகளை சேகரிக்க தொடங்கினார்.
அந்த வகையில் அதிமுக கட்டாயம் வெற்றி பெறாது என்றும் திமுகவே 75 சதவீதம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றும் கூறினார். மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வு விலக்கு அளிக்க வேண்டும் என இரண்டு முறை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்ட ஆளுநர் கைக்கு அனுப்பியும் அது தற்பொழுது வரை ஒப்புதல் அளிக்காமல் உள்ளது.
அதுமட்டுமின்றி முன்பு இருந்த அதிமுக பல சலுகைகள் என ஆரம்பித்து அரசின் பணத்தை சுரண்டியதால் தற்பொழுது பொருளாதார ரீதியாக பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளோம், எனவே வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மகளிருக்கு வழங்க உள்ள ரூபாய் ஆயிரம் குறித்து கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.