Breaking: ஓபிஎஸ்ஸுக்கு முக்கிய இடம்.. கறாராக பதிலளித்த அப்பாவு!! சட்டப்பேரவையில் அரங்கேறப்போகும் பரபரப்பு!!

Photo of author

By Rupa

Breaking: ஓபிஎஸ்ஸுக்கு முக்கிய இடம்.. கறாராக பதிலளித்த அப்பாவு!! சட்டப்பேரவையில் அரங்கேறப்போகும் பரபரப்பு!!

சட்டப்பேரவையில் முன்னதாகவே நடைபெற்ற கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு எதிர்கட்சி துணைத் தலைவர் என ஓபிஎஸ் அவர்களுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டதால் எடப்பாடி கலந்து கொள்ளாமல் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.ஆர் பி உதயகுமாருக்கு துணை தலைவர் இருக்கையை தரகோரியும் அதனை சபாநாயக்கர் மறுத்ததும் இவர் அவையை புறக்கணித்தற்கு ஓர் முக்கிய காரணம்.

அந்த வகையில், ஈரோடு இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு சாதகமாக அறிவிப்பு வெளியிட்ட நிலையில் இதனை தொடர்ந்து ஒற்றை தலைமை விவகாரமும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை அடுத்து முடிவுக்கு வந்தது.

உச்ச நீதிமன்றம் ஓ பன்னீர்செல்வம் மனு அளித்த மேல்முறையீட்டு வழக்கிற்கு இடைக்கால பொதுச் செயலாளர் பதவி மற்றும் பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உத்தரவிட்டதை அடுத்து தற்பொழுது ஓபிஎஸ் பின்னடைவை சந்தித்தார்.இடைக்கால பொதுச்செயலாளராக இருந்த பொழுதே எடப்பாடி அவர்கள் பன்னீர் செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் மீண்டும் சட்டசபை கூட்டம் நடைபெறப் போவதால் கடந்த முறை போல ஓபிஎஸ் அவர்களுக்கு எந்த இருக்கை ஒதுக்கப்படும் என்று பெரும் சந்தேகம் எழுந்துள்ளது.இது குறித்த சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு-விடம் இதுகுறித்து பத்திரிக்கை நிருபர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் இவர் கூறியதாவது, சட்டமன்றத்தில் யாரை எங்கு உட்கார வைக்க வேண்டும் என்பது குறித்து முழு உரிமையும் அந்த சட்டசபை தலைவருக்கு உள்ளது என்பதால் கூட்டம் நடைபெறும் பொழுது அதனைப் பார்த்துக் கொள்ளலாம் என கறாராக கூறியுள்ளார்.அதேபோல கட்டாயம் இந்த ஆண்டு மகளிருக்கான மாதம் ரூ 1000 வழங்கும் திட்டமானது செயல்பாட்டிற்கு வரும் எனக் கூறினார்.