இறுதி கட்ட பிரச்சாரம் இன்றுடன் நிறைவு! ஈரோடு இடைத்தேர்தல் அப்டேட்ஸ்! 

0
365
#image_title

இறுதி கட்ட பிரச்சாரம் இன்றுடன் நிறைவு! ஈரோடு இடைத்தேர்தல் அப்டேட்ஸ்! 

ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவையொட்டி அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வந்தது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி விட்ட சூழ்நிலையில் அரசியல் தலைவர்கள் பலர் தங்கள் கட்சி வேட்பாளரை ஆதரித்து இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதையடுத்து இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடிவடைய இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் இறுதி கட்டப் பிரச்சாரம் நிறைவடைந்தது.

தேர்தல் பிரச்சாரத்திற்காக வெளியூர்களில் இருந்து பல்வேறு அரசியல் கட்சியினர்  தங்கள் கட்சி வேட்பாளரை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குகள் சேகரித்து வந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகளின்படி,  இன்று மாலை 6 மணியோடு பிரச்சாரம் நிறைவடைந்ததால் தொகுதியை விட்டு அரசியல் கட்சியினர் வெளியேறி வருகின்றனர்.

 

Previous articleகாதலியுடன் நெருங்கி பழகிய மாணவர்! காதலனால் நேர்ந்த கொடூரம்! 
Next articleநடிகர் ஆதி நடிக்கும் புதிய படத்தில் இணையும் பிரபல நடிகை!