தேஜஸ் விரைவு ரயில் இனிமேல் இங்கெல்லாம்  நிற்கும்!  ரயில்வே வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! 

0
267
#image_title

தேஜஸ் விரைவு ரயில் இனிமேல் இங்கெல்லாம்  நிற்கும்!  ரயில்வே வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! 

சென்னை எழும்பூரில் இருந்து தேஜஸ் விரைவு ரயில் மதுரை வரை வியாழக்கிழமை தவிர மற்ற நாட்களில் சென்று வருகிறது. இது இனிமேல் சில ரயில் நிலையங்களில் நிற்கும் என ரயில்வே வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, திருச்சி, திண்டுக்கல் ரெயில் நிலையங்கள் வாயிலாக மதுரை  ரயில் நிலையம் நோக்கியும், அதேபோல் மறுமார்க்கமாக மதுரையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு சென்னை நோக்கியும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. வாரத்தில் வியாழக்கிழமைகளை தவிர, மற்ற அனைத்து நாட்களிலும் இந்த ரெயில் இயக்கப்படுகிறது. 

முதலில் இந்த ரயில் சென்னை எழும்பூர், திருச்சி,  கொடைரோடு (திண்டுக்கல்) வழி வழியாக மதுரைக்குச் சென்றது. ஆனால் திண்டுக்கல் மக்கள் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தேஜஸ் ரயில் நிற்க பல்வேறு கோரிக்கைகள் விடுத்தனர். இதையடுத்து தேஜஸ் ரயில் கொடை ரோட்டுக்கு பதிலாக திண்டுக்கல்லில் நின்று செல்லும் என்று ரயில்வே வாரியம் அறிவித்தது.

மேலும் தாம்பரத்திலும் ரயில் நின்று சென்றால் பல்வேறு மக்கள் பயனடைவார்கள் என பல்வேறு கோரிக்கைகள் கோரிக்கைகள் வந்ததை அடுத்து அங்கேயும் இனி தேஜஸ் ரயில் நின்று செல்லும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

எனவே சென்னை எழும்பூர்-மதுரை இருமார்க்கத்திலும் செல்லும் (வ.எண்.22671, 22672) தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சோதனை அடிப்படையில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே வாரியம் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் அறிவித்தது. இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

இதன்படி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இன்று காலை 6 மணிக்கு புறப்பட்ட தேஜஸ் ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று சென்றது. தாம்பரம் வந்த தேஜஸ் ரயிலை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், திமுக எம்பி டி .ஆர்.பாலு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இன்றிலிருந்து ஆறு மாதங்களுக்கு இந்த ரயில் நிலையத்தில் சோதனை ஓட்டமாக நின்று செல்லும். பின்னர் ரயில் வருவாயின் அடிப்படையில் நிரந்தரமாக நிற்பதற்கு முடிவு செய்யப்படும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

 

 

Previous articleகால் வலியால் மிகவும் அவதிப்படுகின்றீர்களா? இதை தடவிய சில மணி நேரங்களில் வலி பறந்து போகும்!
Next articleபப்புவா நியூ கினியா, ஆப்கானிஸ்தான் பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; அச்சத்தில் மக்கள்!