பப்புவா நியூ கினியா, ஆப்கானிஸ்தான் பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; அச்சத்தில் மக்கள்!

0
209
#image_title

பப்புவா நியூ கினியா, ஆப்கானிஸ்தான் பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; அச்சத்தில் மக்கள்!

பப்புவா நியூ கினியா பகுதியில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது, இது ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்தது. பப்புவா நியூ கினியாவில் நியூ பிரிட்டன் தீவுக்கூட்டம் உள்ளது. நியூ பிரிட்டன் நகரில் இருந்து 38 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

மேலும் ஆப்கானிஸ்தானிலும் இன்று அதிகாலையில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. பைசாபாத்தில் இருந்து கிழக்கே 273 கிலோ மீட்டர் தொலைவில் அதிகாலை 2.14 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 180 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக பல நாடுகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால், மக்கள் பீதியில் உள்ளனர்.

author avatar
Parthipan K