ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காலை 9 மணி வரை பதிவான வாக்குப்பதிவு நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணிக்கு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காலை 9 மணி வரை 10.10% வாக்குகள் பதிவாகியுள்ளது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக கட்சியின் தென்னரசு, தேமுதிக கட்சியின் எஸ். ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் மேனகா, சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 77 வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.