Breaking News, District News

ஏடிஎம்மில் பணம் எடுத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! 200 ரூபாய் நோட்டுகளுக்கு பதில் ரூ 20!

Photo of author

By Parthipan K

ஏடிஎம்மில் பணம் எடுத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! 200 ரூபாய் நோட்டுகளுக்கு பதில் ரூ 20!

Parthipan K

Button

ஏடிஎம்மில் பணம் எடுத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! 200 ரூபாய் நோட்டுகளுக்கு பதில் ரூ 20!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சாலைப்புதூர் தோணுகால் சாலையில் தனியார் ஏடிஎம் மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.  படர்ந்தபுளியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஐயப்பன் என்பவர் தனது ஏடிஎம் கார்டு மூலம் ரூ 3500 பணம் எடுத்துள்ளார். ஆனால் அவருக்கு ஆறு 500 ரூபாய் நோட்டுகள், ஒரு நூறு ரூபாய் நோட்டு, இரண்டு இருபது ரூபாய் நோட்டு என 3500க்கு பதில் 3140 மட்டுமே வந்துள்ளது.

200 நோட்டுகளுக்கு பதிலாக இருபது ரூபாய் நோட்டுகள் வந்ததாக தெரியவந்துள்ளது.அதனால் அதிர்ச்சி அடைந்த ஐயப்பன் இதுகுறித்து புகார் செய்ய நினைத்தார். ஆனால் அந்த ஏடிஎம் மையத்தில் எந்த ஒரு தொடர்பு எண்ணும் இல்லை. அதனால் அவர் தான் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து தகவல் அறிந்து  சம்பந்தப்பட்ட ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த ஆய்வில் அங்கு நின்று கொண்டிருந்த ஐயப்பனிடம் 20 ரூபாய் நோட்டு ஏடிஎம்மில் வர வாய்ப்பு இல்லை இருந்தபோதிலும் இது குறித்து ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தவறு நடந்து இருந்தால் அடுத்த மூன்று நாட்களுக்குள் உங்களுக்கு வங்கி கணக்கில் பணம் திருப்பி செலுத்தப்படும் என்று தெரிவித்தனர்.இந்த சம்பவம் அங்கு  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசின் EPFOவில் வேலை வாய்ப்பு!! 577 காலியிடங்கள்- மிஸ் பண்ணிடாதீங்க!!

மாணவர்களின் கவனத்திற்கு! நாளை தொடங்கும் 12 ஆம் வகுப்பிற்கான செய்முறை தேர்வு!