தெற்கு ரயில்வே வெளியிட்ட அப்டேட்! இங்கு வாராந்திர ரயில் சேவை நீட்டிப்பு!
தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத் என்ற பகுதியில் இருந்து ராமநாதபுரம் வரையிலும் வாரம் தோறும் சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட்டு வருகின்றது. இந்த சிறப்பு ரயில் சேவையானது தற்போது ஜூன் மாதம் வரை நீட்டித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மேலும் செகந்திராபாத் இராமநாதபுரம் ரயில் சேவை மார்ச் ஒன்றாம் தேதி முதல் ஜூன் 28ஆம் தேதி வரையிலும் ராமநாதபுரம் செகந்திராபாத் ரயில் சேவை மார்ச் ஒன்றாம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.மேலும் வாரந்தோறும் புதன்கிழமை இரவு 9.10 மணி அளவில் செகந்திராபாத்திலிருந்து புறப்படும் ரயிலானது மறுநாள் இரவு 10.30 மணிக்கு இராமநாதபுரம் சென்றடையும்.
அதனைத் தொடர்ந்து மறுமார்க்கமாக காலை 9 மணி அளவில் ராமநாதபுரத்திலிருந்து புறப்படும் ரயில் பகல் 12:50 மணிக்கு செகந்திராபாத் வந்தடையும். இந்த ரயில் சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, சிதம்பரம், சீர்காழி மயிலாடுதுறை, திருவாரூர், விழுப்புரம், திருத்துறைப்பூண்டி, அதிரம்பட்டி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, மானாமதுரை மற்றும் சிவகங்கை ஆகிய வழித்தடங்கள் வழியாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.