பொதுத்தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இன்று ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!

0
214
Important information released for individual candidates writing public examination! Download Hall Ticket Today!
Important information released for individual candidates writing public examination! Download Hall Ticket Today!

பொதுத்தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இன்று ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!

கொரோனா பெருந்தொற்றின் போது கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவால் அனைத்தும் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான நேரடி வகுப்பு தொடங்கியது. மேலும் கடந்த டிசம்பர் மாதம் தான் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு மார்ச் 13ஆம் தேதி தொடங்க உள்ளது.அதற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு அந்தந்த பள்ளி  தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாளை 12 ஆம் வகுப்புக்கு செய்முறை தேர்வு தொடங்க உள்ளது. இந்நிலையில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் எழுத விண்ணப்பித்திருந்த தத்தேர்வர்கள் தேர்வு கூட நுழைவுச்சீட்டை இன்று பிற்பகல் முதல் இணையதளத்தில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே ஹால் டிக்கெட் மட்டும் வழங்கப்படும். பொது தேர்வுகளுக்கான கால அட்டவணையை அதில் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K