அரசு பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு! இந்த தேதியில் தேர்வு மிஸ் பண்ணாதீங்க!

0
355
For the attention of government school students! Don't miss the exam on this date!
For the attention of government school students! Don't miss the exam on this date!

அரசு பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு! இந்த தேதியில் தேர்வு மிஸ் பண்ணாதீங்க!

தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் உறுப்பினர்  அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்  கூறியதாவது அரசு மாதிரி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் சேர்ப்பதற்கு அடிப்படை மதிப்பீடு தேர்வு நடத்தப்படுகின்றது.

அந்த தேர்வானது நடப்பாண்டு மார்ச் 4ஆம்  தேதி காலை 10:30 முதல் 12 மணி வரை நடைபெறும். இந்த தேர்விற்கு ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் மொத்தம் 240 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட வேண்டும்.

இந்த தேர்வினை மாணவர்கள் எழுதுவதற்கான தேர்வுக்கான இடம் மற்றும் இதர ஏற்பாடுகளை முதன்மை கல்வி அதிகாரிகள் செய்து தர வேண்டும். மேலும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வு எழுத தகுதி பெற்ற மாணவர்களின் பட்டியலை சேகரித்து அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனை அடுத்து மாணவர்களை தேர்வுக்கு அழைத்து வந்து மீண்டும் கூட்டிச் செல்ல பொறுப்பு ஆசிரியையும் நியமிக்க வேண்டும். இந்தத் தேர்வானது ஓஎம்ஆர் விடைத்தாளில் மாணவர்கள் எழுதுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாதிரி பள்ளி மாணவர் சேர்க்கைக்கு தகுதி தேர்வு நடத்தும் முறைக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்போது அவர்கள் கூறுகையில் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மாதிரி பள்ளியின் வளர்ச்சிக்காக பிற அரசு பள்ளிகளில் உள்ள திறமையான மாணவர்களை தேடி கண்டறிந்து சேர்ப்பது சரியல்ல இந்த முயற்சியை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Previous articleசொரியாசிஸ் பிரச்சனை குணமாக! ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகம்! 
Next articleவணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடி உயர்வு! உணவக உரிமையாளர்கள் அதிர்ச்சி!