சொரியாசிஸ் பிரச்சனை குணமாக! ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகம்! 

0
370
#image_title

சொரியாசிஸ் பிரச்சனை குணமாக! ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகம்!

கருஞ்சீரகத்தை எதற்கு எப்படி பயன்படுத்துவது மற்றும் அதனுடைய பலன்கள்.கருஞ்சீரகம் என்பது ஒரு அற்புதமான மூலிகை வகை ஆகும். இது இறப்பை தவிர மற்ற அனைத்து நோய்களுக்கும் ஒரு அருமருந்தாக செயல்படுகிறது.

அரபு நாட்டில் இதை தற்போது வரையிலும் உணவில் சேர்த்து பயன்படுத்துகிறார்கள்.மருத்துவ குணம் கொண்ட கருஞ்சீரகத்தின் விதையில் தைமோ குயினன் என்ற வேதிப் பொருள் உள்ளன.

வேறு எந்த ஒரு தாவரத்திலும் இந்த வேதிப்பொருளானது கிடையாது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது.கருஞ்சீரகத்தில் உடலுக்கு நன்மை தரக்கூடிய கொழுப்புகள் இருக்கிறது. இது கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவுகின்றன.

மேலும் அமிலங்கள் , இரும்பு சத்து ,விட்டமின்கள்,கால்சியம்போன்ற சத்துக்கள் இதில் அதிக அளவு உள்ளது. இது ஆன்ட்டி ஆக்சைடு ஆகவும் செயல்படுகிறது.

கருஞ்சீரகம் ஆனது ஆஸ்துமா, வீக்கம், இதய நோய், புற்றுநோய் போன்றவைகளை குணமாக்கும் தன்மை கொண்டது. கருஞ்சீரக எண்ணையை 2 சொட்டு மூக்கில் விட்டால் மூக்கடைப்பு உடனடியாக குணமாகிறது.

மேலும் சொரியாசிஸ் கரப்பான் போன்ற நோய்கள் உள்ளவர்கள் இந்த கருஞ்சீரகத்தை அரைத்து தேய்த்து குளித்து வர நோய் குணமாகிறது.மேலும் 1 ஸ்பூன் கருஞ்சீரகப் பொடிய வெந்நீர் அல்லது தேனுடன் கலந்து சாப்பிட்டு வர பித்தப்பை கற்கள், சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கிறது.

author avatar
Parthipan K