இன்று முதல் மலையேற பக்தர்களுக்கு அனுமதி! வனத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!

0
236
#image_title

இன்று முதல் மலையேற பக்தர்களுக்கு அனுமதி! வனத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!

விருதுநகர் மாவட்டம் வத்தி இருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோவில் பக்தர்கள் வருகை அதிகம் காணப்படும். அந்த கோவிலில் மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபட நான்கு நாட்கள் மட்டும் அனுமதி வழங்கி வனத்துறையினர் உத்தரவிடுவார்கள்.

அந்த வகையில் வருகிற 7 தேதி மாசி மாத பௌர்ணமி மற்றும் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் வரும் எட்டாம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மேலும் இந்த மலையினை பத்து வயது உட்பட்டவர்களும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களும் ஏற அனுமதி கிடையாது.

அதனைத் தொடர்ந்து மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். மலை ஏறும் பொழுது எளிதில் தீப்பெற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. அதுமட்டுமின்றி மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது. இரவு நேரங்களில் மலைக்கோவிலில் தங்க பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. இது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது.

மேற்கண்ட அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மலைப்பகுதிகளில் மழை பெய்தாலும் அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்தாலோ மலை ஏற வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக வழங்கப்படும் அனுமதி தான் தற்போது ஐந்து நாட்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleசிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழும் நாள்!!
Next articleஆறு மாதங்களாக மூடப்பட்ட காவிரி பாலம் இன்று திறப்பு! மக்கள் பயமின்றி பயணம் செய்யலாம்!