ஆசிரியர்கள் வெளியிட்ட ஷாக் நியூஸ்! 100 சதவீத தேர்ச்சிக்காக பொதுத்தேர்வில் பார்த்து எழுத அனுமதி!

0
221
Shock News published by the authors! For 100 percent pass, look and write in the general exam!
Shock News published by the authors! For 100 percent pass, look and write in the general exam!

ஆசிரியர்கள் வெளியிட்ட ஷாக் நியூஸ்! 100 சதவீத தேர்ச்சிக்காக பொதுத்தேர்வில் பார்த்து எழுத அனுமதி!

கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பாண்டில் தான் பொது தேர்வு நடைபெற உள்ளது. அந்த வகையில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு இம்மாதம் 13 ஆம் தேதி தொடங்க உள்ளது. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு தேர்வு துறை செய்து வருகின்றது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவிப்பு ஒன்று அனுப்பி உள்ளனர்.

அந்த அறிவிப்பில் ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வுகளில்  அரசு பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற வேண்டும் என உயர் அதிகாரிகள் கொடுக்கும் நெருக்கடி காரணமாக முதன்மை கல்வி அலுவலர்களும், பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களை  பார்த்து எழுத அனுமதிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறு தான்  முதலிடங்களை பெறுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பள்ளி கல்வித்துறையின் தற்போதைய ஆணையர் நந்தகுமார் பெரம்பலூர் ஆட்சியராக இருந்தபோது இதேபோன்று நெருக்கடி கொடுத்த மாணவர்களை பார்த்து எழுத அனுமதித்ததாகவும் இந்த ஆண்டு அப்படிதான் நடக்க உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

இந்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த அறிவிப்பு பள்ளி கல்வித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleசற்றுமுன்: அச்சுறுத்தும் புதுவகை வைரஸ்!! மீண்டும் ஊரடங்கா.. தமிழக மக்களுக்கு கடும் எச்சரிக்கை!!
Next articleஅதிமுக வை முழுவதுமாக ஆள அண்ணாமலையின் புதிய சூழ்ச்சி!! போட்ட வலையில் வசமாக சிக்கிய எடப்பாடி!!