விவசாயிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இந்த தேதிக்குள் காப்பீட்டுத் செய்ய விண்ணப்பிக்க வேண்டும்!
விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பில் ஆண்டுக்கு ஒரு 6000 பி எம் கிசான் திட்டத்தின் மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது. அவ்வாறு வழங்கப்படும் தொகையை மூன்று தவணையாக பிரித்து விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். மேலும் ஹோலி பண்டிகை முன்பாகவே இந்த தொகை விவசாயம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் விவசாயிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசு சார்பாக பிரதம மந்திரி பஸல் பீமா யோஜனா திட்டத்தின் மூலம் காப்பீடு வழங்கப்படுகின்றது. இந்த திட்டத்தின் மூலமாக காப்பீடு வழங்கப்படுகின்றது. நடப்பாண்டில் மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், ஈரோடு, வேலூர், கன்னியாகுமரி,நாமக்கல், செங்கல்பட்டு, ராமநாதபுரம், திருவண்ணாமலை மற்றும் திண்டுக்கல் ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்கப்பட உள்ளது.
இந்த மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகையான உணவு தானிய பயிர் மற்றும் எண்ணெய் வித்து பயிர்களுக்கு 1.5 சதவீதம் தோட்டக்கலை பயிர்கள் மற்றும் பண பயிர்களுக்கு 5 சதவீதம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் மூலமாக நெல் தரிசு, பருத்தி, நெல், கருப்பு பருத்தி 3 ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்யப்படும். இந்தத் திட்டத்தினால் சில விவசாயிகள் வேளாண்மை கூட்டுறவு வங்கி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் பொது சேவை மையத்தில் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து பிறகு செலுத்த வேண்டிய பிரிமியம் தொகையை செலுத்தி தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு மின்னணு பரிமாற்றம் சேவை உள்ள ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு இருப்பது அவசியமாகும். பயிர் காப்பீடு செய்வதற்கு இறுதி நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி திருவாரூர் மாவட்டத்திற்கு நெல் 3 15.3.2023 , நெல் தரிசு பருத்தி கரும்பு 31.3.2023, வேலூர் மாவட்டத்திற்கு கரும்பு 31.03.2023, மயிலாடுதுறை நெல் 3 15.03.2023, பருத்தி 3 நெல் தரிசு, பருத்தி, கரும்பு, 31.03.2023, ஈரோடு மாவட்டத்திற்கு கரும்பு 31.03.2023, தஞ்சாவூர் 3, நாமக்கல் மாவட்டத்திற்கு 15.03.2023, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 31.03.2023, திருவண்ணாமலை மற்றும் திண்டுக்கல் மாவட்டத்திற்கு 31.03.2023 ஆகிய தேதிகளில் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.