ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்! இந்த வகை 500 ரூபாய் நோட்டு போலியானது?
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். மேலும் கருப்பு பணத்தை ஒழிக்க தனது அரசு இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என கூறினார். நவம்பர் மாதங்களில் ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் நாட்டில் பல இடங்களில் இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கையிருப்பில் 500 ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பவர்கள் அதனை டிசம்பர் 30ஆம் தேதிக்குள் வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் கடந்த 2016 நவம்பர் 11ஆம் தேதி வரை மட்டுமே பெட்ரோல் பங்குகளில் 500 ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லுபடி ஆனது. அதனைத் தொடர்ந்து புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வெளியானது. அதனை புழக்கத்தில் கொண்டு வந்ததில் இருந்து சிறிது காலம் மக்கள் சிரமம் அடைந்தனர். இந்நிலையில் தற்போது ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ரூ 500 நோட்டுகளை ரொக்கமாக வைத்துள்ளவர்களுக்கு இந்த செய்தி பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் ரிசர்வ் வங்கி கூறியதாவது. சந்தையில் இரண்டு வகை ஐநூறு ரூபாய் நோட்டுகள் ஆனது கிடைக்கின்றது. இரண்டுக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடு எதுவும் இல்லை. அதாவது முதல் பார்வையில் இதன் வேறுபாடுகளை அடையாளம் காண்பது என்பது சற்று கடினம் தான். இதில் ஒரு வகை நோட்டுகள் போலியானது என தகவல் பரவி வருகிறது. அது தொடர்பாக இணையத்தில் வீடியோ ஒன்றும் வைரலாகி வருகின்றது.
அதுகுறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது அந்த உண்மை சோதனைக்கு பின் இணையத்தின் வைரலாகி வரும் அந்த வீடியோ முற்றிலும் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சந்தையில் இரண்டு வகையான நோட்டுகளும் செல்லுபடியாகும். தங்களிடம் இவற்றில் எந்தவித நோட்டுகள் இருந்தாலும் கவலைப்பட வேண்டாம். இரண்டு வகையான நோட்டுகளும் சந்தையில் புழக்கத்தில் உள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.