ஓட்டு எனக்கு போட்டு கிழிசீங்கிளா.. என்ன கேட்க வந்துடீங்க!! மீண்டும் முதல்வர் தூக்கத்தை கெடுத்த பொன்முடி!! 

ஓட்டு எனக்கு போட்டு கிழிசீங்கிளா.. என்ன கேட்க வந்துடீங்க!! மீண்டும் முதல்வர் தூக்கத்தை கெடுத்த பொன்முடி!!

திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளால் முதல்வர் ஸ்டாலினுக்கு தினம் தினம் புது தலைவலி உண்டான விதமாக தான் உள்ளது. முதலில் ஆட்சிக்கு வந்தவுடன் திமுக பெண்களுக்கென்று பல திட்டங்கள் அமல்படுத்த உள்ள நிலையில் அதை வைத்துக் கூட இழிவாக பேச ஆரம்பித்து விட்டனர்.

அதிலும் குறிப்பாக அமைச்சர் பொன்முடி ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்த மக்கள் என்று கூட பாராமல் சரமாரியாக சர்ச்சைக்குரிய விதத்தில் பேசுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.அந்த வகையில் இவர் ஓர் நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் அனைவரும் நீங்கள் ஓசி பஸ்ஸில் தானே செல்கிறீர்கள் என்று கூறியது அனைவர்  மத்தியில் பெரும் எதிர்ப்பை உண்டாக்கியது.

இதே போல பல நிர்வாகிகள் பேசி ஸ்டாலினுக்கு பதில் கூற முடியாத சூழ்நிலை உருவாக்கியதால் நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் பார்த்து பேசும் படி முதல்வர் எச்சரித்தார்.ஆனால் அவர் கூறிய எச்சரிக்கை மணி எல்லாம் இவர்களின் காதில் விழவில்லை, தொடர்ந்து மக்களை அவதூறாக பேசுவதையே வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் அமைச்சர் பொன்முடி விழுப்புரம் மாவட்டம் அருங்குறிக்கை என்ற கிராமத்தில் அரசு பள்ளி திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அவ்வாறு கலந்து கொண்டவரிடம் அங்கிருந்து பொதுமக்கள் தங்களது குறைகளை கூற ஆரம்பித்ததும் இவர், எனக்கு அப்படியே அனைவரும் ஓட்டு போட்டு கிழி கிழினு கிழி கிழிச்சீட்டிங்க நீங்க கேட்கிற அனைத்தையும் செய்வதற்கு என்று பேச ஆரம்பித்தார்.இவ்வாறு இவர் பேசியதும் அங்கிருந்த மக்கள் கோபத்தில் இவருக்கு எதிராக கூச்சலிட ஆரம்பித்து விட்டனர்.

மக்களுக்கு கூறும் கோரிக்கைகள் அனைத்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வர் ஒரு போக்கம் கூறி வந்தாலும், இவர்களது ஆட்சி ஓர் எழுதப்பட்ட நாடகம் அமைப்பை போல தான் உள்ளது.மக்கள் அதிக அளவில் கூச்சலிட ஆரம்பித்ததும் உங்கள் தொகுதிக்கு வந்தால் இப்படித்தான் கத்துவீங்கன்னு எனக்கு நல்லா தெரியும் என்று கூறி அங்கிருந்து பொன்முடி விடைபெற்றார். இவர் அவ்வாறு பேசிய வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாக வருகிறது.