ஞாபக சக்தி அதிகரிக்க! மூன்று பருப்பி இருந்தால் போதும்!
மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்யும் சில வழிமுறை என்ன என்பதை இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
ஞாபக மறதி என்பது வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்படக்கூடிய ஒன்றாகும். அதிகப்படியான மன அழுத்தம் காரணமாகவும் ஞாபக சக்தி குறையும். சரியான தூக்கம் இல்லாதது, மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள் ஞாபகம் சக்தியை பாதிக்கும் எனவே இதனை எவ்வாறு தடுக்கலாம் அதன் வழிமுறைகள் என்ன என்பதை விவரி மூலமாக விரிவாக காணலாம்.
ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்யும் பண்புகள் முந்திரியில் அதிக படியாக நிறைந்துள்ளது. முந்திரிப் பருப்பில் அதிகப்படியான கலோரிகள் நிறைந்துள்ளது. நம் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து விட்டமின் மற்றும் கனிம சத்துக்கள், காப்பர், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிகபடியாக நிறைந்துள்ளது.
தினசரி இதனை சாப்பிட்டு வருவதும் காரணமாக நம் மூளையில் உள்ள நரம்புகளை முதிர்ச்சி ஆகாதவாறு பாதுகாக்கிறது. ஹெச் எல் டி எனும் கெட்ட கொழுப்பினை கரைத்து எல் டி எல் என்னும் நல்ல கொழுப்பினை அதிகரிக்கிறது . பாதாம் பருப்பு இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் மூளையினை பலப்படுத்த உதவுகிறது. வயது முதிர்ச்சியினால் ஏற்படக்கூடிய ஞாபக மறதியனை தடுக்க உதவுகிறது.
பாதாம் பருப்பில் உள்ள ஒமேகா 3 மற்றும் நல்ல கொழுப்புகள் மூளையின் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். விட்டமின் பி6 புரதம் ஆகியவை அதிகப்படியாக பாதாம் பருப்பில் நிறைந்துள்ளது. பூசணி விதைகள் இதில் அதிகப்படியான நார்ச்சத்து, புரதச்சத்து,இரும்புச்சத்து விட்டமின் ஈ அதிக அளவில் நிறைந்துள்ளது.
இதன் காரணமாக ஞாபக சக்தியை அதிகரிக்க செய்கிறது. 10 முந்திரிப் பருப்பு, 10 பாதாம் பருப்பு, 10 பூசணி விதைகள் ஆகியவற்றை மிதமான சூட்டில் வறுத்து அதன் பிறகு இதனை பொடி செய்து ஒரு டம்ளர் பாலுடன் கலந்து வருகி வருவதன் காரணமாக மூளையின் சக்தியை பல மடங்கு அதிகரிக்க செய்யும் மற்றும் ஞாபக சக்தியை அதிகரிக்க செய்ய உதவுகிறது.