மாஸ்டர் படப்பிடிப்பை திடீரென நிறுத்திய வருமானத் துறை அதிகாரிகள்: பெரும் பரபரப்பு

0
139

’மாஸ்டர்’ படப்பிடிப்பை திடீரென நிறுத்திய வருமானத் துறை அதிகாரிகள்: பெரும் பரபரப்பு

விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்புக்கு வந்த வருமானத் துறை அதிகாரிகள் திடீரென படப்பிடிப்பை நிறுத்தி விஜய்யை அழைத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
விஜய் நடித்த பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்தில் இன்று காலை முதல் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தி வரும் நிலையில் தற்போது திடீரென விஜய்யிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர்

இதனை அடுத்து ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணைக்கு வருமாறு சம்மன் அளித்தனர் இந்த சம்மனை ஏற்றுக்கொண்டு வருமான வரித்துறை அதிகாரிகளுடன் சென்றார் இதனால் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது

விஜய் நடித்த பிகில் திரைப்படம் ரூபாய் 300 கோடி வசூல் செய்து மிகப்பெரிய லாபம் அடைந்ததாக கூறப்படும் நிலையில் அதற்குரிய வருமான வரி கட்டாததே இந்த ரெய்டுக்கு காரணம் என்று கூறப்படுகிறது இந்த படத்திற்காக விஜய் வாங்கின சம்பளம் எவ்வளவு அதற்காக செலுத்தப்பட்ட வரி எவ்வளவு என்பது குறித்து விஜயிடம் விசாரிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Previous articleவீணானது இந்திய பேட்ஸ்மேன்களின் அதிரடி: மொத்தமாக வாரிக்கொடுத்த பவுலர்கள்!நியுசிலாந்து வெற்றி!
Next articleடப்பிங் யூனியன் தேர்தல்:சின்மயி மனு தள்ளுபடி: மீண்டும் தலைவர் ஆகிறாரா ராதாரவி?