ரகசிய திருமணத்திற்கு மனைவி வீட்டார் தான் காரணமா? யோகிபாபு விளக்கம்

0
187

நடிகர் யோகிபாபுவுக்கும் மஞ்சு பார்கவி என்ற பெண்ணுக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது என்பது தெரிந்ததே. இருப்பினும் இந்த திருமணத்திற்கு அவருடைய நெருக்கமான 10 பேர்கள் தவிர வேறு யாரும் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது

பிரபல நடிகர் ஒருவரின் திருமணம் ஏன் ரகசியமாக நடக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்த நிலையில் இந்த திருமணம் குறித்து யோகிபாபு விளக்கமளித்தார்

எதிர்பாராத சில சூழ்நிலை காரணமாக தன்னுடைய திருமணத்தில் யாரும் அழைக்க அழைக்க முடியவில்லை என்றும் இதற்காக தான் வருத்தம் கொள்வதாகவும் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய குடும்ப சூழ்நிலையை அனைவரும் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் வரும் மார்ச் மாதம் சென்னையில் நடைபெறும் ரிசப்ஷன் நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ள முறைப்படி அழைப்பு என்றும் கூறியுள்ளார் மேலும் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்

Previous articleபெங்களூரில் திடீரென பாதி மட்டுமே சாய்ந்த கட்டிடம்: பெரும் பரபரப்பு
Next articleரெய்டுக்கு பின்னர் மீண்டும் மாஸ்டர் படப்பிடிப்பில் விஜய்!