ரெய்டுக்கு பின்னர் மீண்டும் மாஸ்டர் படப்பிடிப்பில் விஜய்!

0
197

தளபதி விஜய் நெய்வேலியில் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருந்தபோது திடீரென அங்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் விஜய்யை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்

கடந்த இரண்டு நாட்களாக இரவுபகலாக நடைபெற்ற இந்த விசாரணை நேற்று இரவுடன் முடிவடைந்த நிலையில் விஜய் வீட்டில் இருந்து கணக்கில் வராத எந்த பணமும் கைப்பற்றப்படவில்லை என்று தகவல்கள் வந்தது. இருப்பினும் அவரிடம் வாக்குமூலம் மட்டும் வாங்கிக்கொண்டு விசாரணையை வருமான வரித்துறை அதிகாரிகள் முடித்துக் கொண்டதாக தெரிகிறது

இந்த நிலையில் வருமான வரித்துறை ரெய்டு பிரச்சனை முடிவுக்கு வந்ததை அடுத்து விஜய் இன்று முதல் மீண்டும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள நெய்வேலி சென்றுள்ளார். கடந்த இரண்டு நாட்களாக விஜய் இல்லாத காட்சிகளை படமாக்கி வந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இன்று விஜய் மற்றும் விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க உள்ளதாக கூறப்படுகிறது

Previous articleரகசிய திருமணத்திற்கு மனைவி வீட்டார் தான் காரணமா? யோகிபாபு விளக்கம்
Next articleரோபோ சங்கர் எடுத்த அடுத்த அவதாரம்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here