ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! இனி இந்த பொருள் இரண்டு கிலோ வழங்கப்படும்!

Photo of author

By Parthipan K

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! இனி இந்த பொருள் இரண்டு கிலோ வழங்கப்படும்!

தமிழகத்தில் கடந்த தேர்தலின் பொழுது திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. அந்த வாக்குறுதிகளில் திமுக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை, பெண்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயண சீட்டு வழங்குதல், நான் முதல்வன் திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தது.

எதிர்பார்த்தபடியே திமுக ஆட்சிக்கு வந்தது. அதனை தொடர்ந்து பெண்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லா பயண சீட்டு வழங்குதல், நான் முதல்வன் திட்டம் போன்றவை நடைமுறைப்படுத்தியது. ஆனால் குடும்பத் தலைவிகளுக்கு  ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தாததால் எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2௦ ஆம் தேதி 2023-24 ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குடும்ப தலைவிகளுக்கு செப்டம்பர் மாதம் முதல் ரூ 1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் தமிழகத்தில் உள்ள 2500 கிராம மக்களுக்கும் 15 லட்சம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். ஐந்து மாவட்டங்களில் சிறுதானிய மண்டலங்கள் விரிவாக்கம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் தல 2 கிலோ கேழ்வரகு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேழ்வரகு, திணை, சாமை அதிக அளவில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.