மத்திய அரசு வெளியிட்ட தகவல்! 110 யூடியூப் செய்தி சேனல்களுக்கு தடை!

0
257
information-released-by-the-central-government-110-youtube-news-channels-banned
information-released-by-the-central-government-110-youtube-news-channels-banned

மத்திய அரசு வெளியிட்ட தகவல்! 110 யூடியூப் செய்தி சேனல்களுக்கு தடை!

மக்களவையில் நாட்டில் இறையண்மைக்கு எதிராக தகவல்களை தெரிவிக்கும் யூடியூப் சேனல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் நேற்று எழுத்து பூர்வமாக பதில் அளித்தார். அந்த பதிலில் அவர் கூறியதாவது நாட்டின் இறையன்மைக்கு எதிராக தகவல்களை வெளியிட்ட 110 யூடியூப் செய்தி சேனல்கள் மற்றும் 248 இணையதளம் முகவரி உள்ளிட்டவைகளும் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மத்திய அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறினார்.

அதனைத் தொடர்ந்து மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த அனுராக் தாகூர் கூறுகையில் பத்திரிக்கை தகவல் அலுவலகத்தின் உண்மையை சரிபார்க்கும் பிரிவு 1160 செய்திகள் பொய்யானது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பிரிவு மக்கள் அனுப்பும் கேள்விகள் அடிப்படையிலும் தாமாக முன்வந்து செய்திகளின் உண்மை தன்மையை பரிசோதனை செய்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். இறையண்மைக்கு எதிரான தகவல்களை வெளியிட்ட காரணத்தினால் தான் 110 யூடியூப் செய்தி சேனல்கள் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Previous articleஆன்லைன் ரம்மி தடை மசோதா நாளை மீண்டும் சட்டசபையில் தாக்கல்!!
Next articleஅம்மா இலவச தையல் பயிற்சி! எடப்பாடி பழனிசாமி சான்றிதழ் வழங்கி வாழ்த்து!