ஆன்லைன் ரம்மி தடை மசோதா நாளை மீண்டும் சட்டசபையில் தாக்கல்!!

0
212
#image_title

ஆன்லைன் ரம்மி தடை மசோதா நாளை மீண்டும் சட்டசபையில் தாக்கல்!!

ஆன்லைன் ரம்மி எனப்படும் சூதாட்டத்தில் தமிழகத்தில் பல உயிர்கள் பலியாகி வந்த நிலையில் தமிழக எதிர்க்கட்சிகள், பொதுநல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள தமிழக அரசு ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய மசோதாவை ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பிவைத்தனர்.

தமிழக அரசு அனுப்பிவைத்த தீர்மான மசோதாவில் பல சந்தேகங்களை கேட்டு மீண்டும் அரசுக்கே அனுப்பி வைத்தார் ஆளுநர். இந்நிலையில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் மீண்டும் அணைத்து கட்சிகளின் ஒத்துழைப்போடு தீர்மானம் நிறைவேற்றி அதன் மசோதாவை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

நாளை கூடவுள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை தாக்கல் செய்யவுள்ளதாகவும், ஏற்கனவே ஆளுநர் கேட்டிருந்த சந்தேகங்கள் அனைத்திற்கும் பதில் அளிக்க பட்டுள்ளதாகவும், மீண்டும் ஆளுநருக்கு அனுப்பப்படும் மசோதாவில் ஆளுநர் தமிழக அரசிடம் என்ன மாதிரியான கேள்விகளை கேட்டார் என்பதும், அதற்கு தமிழக அரசு அளித்துள்ள பதில்கள் குறித்து நாளை சட்டமன்றத்தில் விரிவாக எடுத்துரைக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.

நாளை நடைபெறும் கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்யும் ஆன்லைன் ரம்மி அவசரகால தடை சட்ட மசோதா மீது ஆளுநர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. எண்ணற்ற உயிர்கள் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பறி போவதை தடுக்கும் சக்தியாக ஆளுனரின் கையெழுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.