காளான் யாரெல்லாம் சாப்பிடலாம்? எச்சரிக்கை இவர்கள் இதை தொடவே கூடாது!
காளானில் உள்ள ஆரோக்கியமான நன்மைகள்.நான் சாப்பிடக்கூடிய உணவு வகைகளில் ஏராளமாக இருந்தாலும் இந்த காளானானது ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறது. தற்போது உள்ள காலகட்டத்தில் அனைவரும் இந்த காளானை உணவில் அதிகமாக சேர்த்துக் கொண்டு வருகின்றன. இந்த காளானில் மிகவும் ஆரோக்கியமான நன்மைகளும் பயன்களும் இருக்கின்றது. இந்த காளானில் அதிக அளவு புரோட்டின் கம்மியான அளவு கலோரி இருப்பதால் இதில் உடல் எடையை குறைக்கும் என்று பலரும் இதனை உணவில் சேர்த்துக் கொள்வார்கள். மேலும் இந்த காளானானது சாப்பிட்ட உடனே செரிமானம் ஆகக் கூடியது. மேலும் கேன்சர் வராமலும் தடுக்கும் ஆற்றல் இந்த காளானுக்கு மிகவும் அதிகம். இந்த காளான் இதயத்திற்கு மிகவும் பாதுகாப்பாக அமைகிறது.
முதலில் இந்த காளானை எவ்வாறு சுத்தம் செய்வது என்றால் ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு பிழிந்து இந்த காளானை கழுவி எடுக்க வேண்டும் .பிறகு ஒரு காட்டன் துணியில் போட்டு காயவைத்து பிறகு அதனை சமையலுக்கு உபயோகப்படுத்தினால் மிகவும் நல்லது. மேலும் காளானை மூன்று நாட்கள் மட்டும் வைத்து அதனை பயன்படுத்த வேண்டும். மேலும் இந்த காளான் பாலை வற்ற வைக்கும் தன்மை அதிகம் உள்ளது .
ஆகையால் பாலூட்டும் தாய்மார்கள் இந்த காளான் சாப்பிடக்கூடாது. மேலும் கீழ்வாதம் உள்ளவர்கள் உணவில் இந்த காளானை சேர்த்துக் கொள்ளக் கூடாது. அது மட்டுமல்லாமல் காளானை சமைத்து மட்டுமே சாப்பிட வேண்டும் பச்சையாக சாப்பிடக்கூடாது. மேலும் முதல் நாள் காளானை பயன்படுத்திவிட்டு மீதமுள்ள காளானை மறுநாள் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் அது கருப்பு நிறமாக மாறி துர்நாற்றம் வீசப்படும் இவ்வாறு இருந்தால் அந்த காளானை கெட்ட போன பொருளாக கருதப்படுகிறது.