அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தீர்ப்பு!! ஓபிஎஸ் மேல்முறையீடு இன்று விசாரணை
அதிமுகவில் உச்சகட்ட பதவியான பொதுச்செயலாளர் பதவியை அடைவதற்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இதனை தொடர்ந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது, இதில் கடந்த வருடம் எடப்பாடி தலைமையில் கூட்டிய பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் அனைத்தும் செல்லுபடியாகும் என்று வழங்கிய தீர்ப்பினை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொது செயலாளராக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ஏற்க மனமில்லாத பன்னீர்செல்வம், மீண்டும் இரட்டை நீதிபதிகள் கொண்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார், இதனை தொடர்ந்து இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர் . ஒருபக்கம் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொது செயலாளராக மகுடம் சூட்டிக்கொண்ட நிலையில் பன்னீரின் இந்த மேல்முறையீட்டு மனுவில் மீண்டும் எடப்பாடிக்கு சற்று சறுக்கல் வருமோ என்ற நிலை உருவாகி உள்ளது.
எது எப்படியோ பன்னீர்செல்வம் போடும் ஒவ்வொரு பந்தையும் சிக்ஸர் அடித்து தூள் கிளப்பி வரும் எடப்பாடி, அடுத்து வரும் பந்தையும் அடித்து தூள் கிளப்புவார் என்று அதிமுகவினர் கூறுகிறனர். இதனிடையே நாளையும் பன்னீருக்கு எதிராக தீர்ப்பு வந்தால் ஒரு வேலை அவர் ஏற்கனவே கூறியது போல சசிகலாவுடன் கூட்டணி சேர்ந்து எடப்பாடியை எதிர்த்து செயல்படவும் வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.