ராகுல்காந்தியின் பேச்சுக்கு சாவர்க்கர் பேரன் எதிர்ப்பு!

0
149
#image_title

ராகுல்காந்தியின் பேச்சுக்கு சாவர்க்கர் பேரன் எதிர்ப்பு! 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினருமான ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது சர்ச்சையான வகையில் பேசியது தொடர்பாக, அவர் மீது வழக்கு தொடரப்பட்டு வந்த நிலையில், இந்த வழக்கில் மோடி என்ற சமுதாயத்தை இழிவாக பேசியதின் காரணமாக ராகுல் காந்தி மீது குஜராத் மாநில முன்னாள் அமைச்சர் பூர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை கடந்த நான்கு வருடமாக விசாரித்த சூரத் நீதிமன்றம், கடந்த வாரம் ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பளித்து, இரண்டு வருட சிறை விதித்தது. இதனை தொடர்ந்து தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தபோது, தன்னுடைய பெயர் காந்தி, மன்னிப்பு கேட்க நான் என்ன சர்வார்கர என காட்டமாக கூறியிருந்தார்.

ராகுலின் இந்த பேச்சுக்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு குரல் எழுந்த வண்ணம் இருந்தது, இதனை அடுத்து சாவர்க்கர் பேரன் ரஞ்சித் என்பவர் கூறுகையில், தான் ஒன்றும் சாவர்க்கர் இல்லை, எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்நிலையில் சாவர்க்கர் மன்னிப்பு கேட்டதை ராகுல் காந்தி நேரில் பார்த்தாரா, அப்படி இருந்தால் அதற்கான ஆதாரத்தை காண்பிக்க வேண்டும் எனவும், ஆனால் ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் இரண்டு முறை மன்னிப்பு கேட்டதை இந்த நாடே அறியும், எனவே ராகுல் காந்தி இது போன்ற சிறுபிள்ளைத்தனமான வார்த்தைகளை அவர் பயன்படுத்த வேண்டாம் என ரஞ்சித் சாவர்க்கர் ராகுலுக்கு அறிவுறுத்தி உள்ளார்.