சிம்புவின் பத்து தல திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுப்பு?
பிரபல தமிழ் திரைப்பட நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், ஒளிப்பதிவாளர், என பன்முக திறமை கொண்டவர் டி ராஜேந்தர், இவருடைய மகன் சிம்பு சிறுவயது முதலே நடித்து வரும் இவர், கதாநாயகன் அந்தஸ்த்துக்கு உயர்ந்த பின்பு பலவிதமான திரைக்கதை அம்சங்கள் கொண்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் ஏதாவது ஒரு சர்ச்சைகளில் சிக்குவது உண்டு, மேலும் இவர் மீது திரைப்பட தயாரிப்பாளர்கள் பல புகார்களை கூறி நடிகர் சங்க பஞ்சாயத்து வரை இழுத்து விடுவது உண்டு, தற்போது நடிகர் சிம்பு பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், அவர் ரசிகர்களுக்கு சிறப்பு அதிகாலை காட்சிக்கு தமிழக அரசு இன்னும் அனுமதி அளிக்காமல் உள்ளது.
தங்களது விருப்பமான நடிகர் படத்திற்கு சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது சிம்பு ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது, மேலும் காலை எட்டு மணியிலிருந்து தான் அனுமதி வழங்கப்படுவதாகவும் அதற்கு முன்பு அனுமதி கிடையாது என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது தங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாகவும் ரசிகர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
ஏற்கனவே வெந்து தணிந்தது காடு , மாநாடு, போன்ற ஹிட் படங்களை கொடுத்த சிம்பு இந்த பத்து தல படத்தையும் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியை கொடுப்பார் என்ற எக்கச்சக்க எதிர்பார்ப்பில் அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர், ரசிகர்களின் விருப்பத்தை அரசு பூர்த்தி செய்யுமா என பொறுத்திருந்து தான் ரசிகர்கள் பார்க்க வேண்டும்.