மீண்டும் தலைதுக்கும் தீண்டாமை கொடுமை? சென்னையில் பரபரப்பு!!

0
303
#image_title

மீண்டும் தலைதுக்கும் தீண்டாமை கொடுமை? சென்னையில் பரபரப்பு!!

தமிழ் திரைப்பட நடிகர் சிம்பு இவரது நடிப்பில் இன்று பத்து தல என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் இன்று காலை படத்தை பார்ப்பதற்கு நரிக்குறவர் இனத்தை சேர்ந்த பத்து பேர் வந்திருந்தனர்.

பத்து தல படத்துக்கு யூ ஏ சான்றிதழ் தரப்பட்டுள்ளது, இந்நிலையில் காலை முதல் காட்சியின் போது ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர், அவர்கள் ஒவ்வொருவராக அனுமதி சீட்டினை பார்த்து பரிசோதனை செய்து உள்ளே அனுப்பி கொண்டிருந்தனர் திரையரங்கு ஊழியர்கள், அப்போது திடீரென நரிக்குரவ மக்கள் பத்து பேர் தாங்கள் எடுத்து வந்த அனுமதி சீட்டினை காண்பித்த போது, திரையரங்கு ஊழியர்கள் அவர்களை உள்ளே விட அனுமதி மறுத்தனர் இதனால் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

இதனை கவனித்த சில ரசிகர்கள் திரையரங்கு ஊழியர்களிடம் அவர்களை ஏன் உள்ளே விட மறுக்கிறிர்கள் என கேள்வி கேட்டனர், அதற்கு எதுவும் பேசாமல் மௌனமாக இருந்துள்ளனர் இதனால் சற்று சலசலப்பு ஏற்படத் தொடங்கியது, மேலும் அங்கு எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியது.

நரிக்குறவ மக்கள் திரையரங்கில் அனுமதிக்காத நிர்வாகம் குறித்து வீடியோ வெளியானதால் இதுகுறித்து திரையரங்கு நிர்வாகம் அங்குள்ளவர்களிடம் சமரசம் பேசியது, மேலும் படம் யூ ஏ சான்றிதழ் தரப்பட்டுளதால் சிறுவர்களை அனுமதிக்க முடியாது என கூறினர், பின் இந்த சம்பவம் வேறு மாதிரி ஆவதை புரிந்துகொண்ட நிர்வாகம் ஒரு வழியாக அவர்களை உள்ளே அனுப்பி படம் பார்க்க வைத்தது.

Previous article11 ஆண்டுகள் கடந்தும் நீங்காத நினைவில் உள்ள திருச்சியை சேர்ந்த ராமஜெயம்! யார் இந்த மனிதர்?
Next articleஆன்லைன் விளையாட்டு விளையாடுபவர்களுக்கு 30% வரி