11 ஆண்டுகள் கடந்தும் நீங்காத நினைவில் உள்ள திருச்சியை சேர்ந்த ராமஜெயம்! யார் இந்த மனிதர்?

11 ஆண்டுகள் கடந்தும் நீங்காத நினைவில் உள்ள திருச்சியை சேர்ந்த ராமஜெயம்! யார் இந்த மனிதர்?

திருச்சி : திருச்சி மாவட்டம் காணக்கிளியநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கே.என்.ராமஜெயம். இவர் திமுக முதன்மைச் செயளாலரும், அமைச்சருமான கே.என் நேரு அவர்களின் சகோதரர் ஆவார். ராமஜெயம் இறந்து 11 ஆண்டுகள் கடந்த நிலையில் அவர் நினைவில் வாழும் மக்கள் நினைவு அஞ்சலி போஸ்டர்களை ஒட்டி வருத்தத்தை தெரிவித்திருக்கின்றனர்.

பிறந்த ஊரினை நினைவு கூறும் வகையில் ராமஜெயம் மற்றும் அவர் சகோதரர்களுக்கு பெயர் சூட்டப்பட்டன. கே.என்.நேரு, கே.என்.ராமஜெயம், கே.என்.மணிவண்ணன், கே.என.ரவிச்சந்திரன் இதில் நேரு மூத்தவர் ஆவார். அவர் சொல்லை மூவரும் தவறாது பின்பற்றுவர். கே.என்.நேரு வின் நிழலாக செயல்பட்டவர் ராமஜெயம். 5 முதல் 7 மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர். எந்த ஒரு விவகாரத்தையும் நுணுக்கமாக கையாள்பவர்.

கே.என். ராமஜெயம் எம்.பி.ஏ படிப்பில் தங்கப்பதக்கம் வென்றவர். போர்வெல் ஒப்பந்த பணிகளை தமிழ்நாடு அல்லாது வெளிமாநிலங்களிலும் பரப்பியவர். மே , ஜூன் போன்ற மாதங்களில் கல்விக் கட்டணம் கட்ட முடியாமல் இருப்பவர்கள் அவர் அலுவலகத்தை
தஞ்சம் அடைவார்கள். கே.என்.நேருவை பார்ப்பதை விட ராமஜெயத்தை பார்த்தால் போதும் என மக்கள் நினைக்கும் அளவிற்கு செயல்பட்டவர்.

மறைமுக அரசியலில் இருந்த ராமஜெயம் நேரடி களம் காண விரும்பினார். கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட விரும்பினார். துரதஷ்டவிதமாக அந்த தொகுதியில் நெப்போலியனை நிருத்தினார் கருணாநிதி. இதற்கிடையே ராமஜெயம் அவர்கள் கேர் என்ற பெயரில் பள்ளி மற்றும் கல்லூரிகளை நடத்தி வந்தார். பாட வகுப்புகளில் புதுவித சிறப்பம்சங்களை கொண்டுவந்தார். எதிர்பாராத விதமாக 29/03/2012 அன்று கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்டார். தற்போது 11 ஆண்டு கடந்த நிலையிலும் திருச்சி மாநகர மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் …