நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

0
243
#image_title

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி தொடரும் என அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய எடப்பாடி தமிழகத்தில் தற்போதைய சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்குலைந்து உள்ளது, அனைத்து இடங்களிலும் போதை பொருட்கள் சுலபமாக கிடைகின்றன இதனை தடுப்பதற்கு அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

 

தமிழக ஆளுநரை திமுக எப்போதும் குறை சொல்லி கொண்டு தான் உள்ளனர், ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்து நிதி அமைச்சர் தவறான தகவல்களை சட்டமன்றத்தில் தெரிவித்து வருகிறார், தற்போது இந்த ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை இலவச உணவு திட்டம் ஏற்கனவே அதிமுக ஆட்சியில் அட்சய பாத்திரம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்டது, இன்றைக்கு பெயர் மாற்றி இவர்கள் ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் போல பேசுகிறார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அம்மா உணவகத்தை மூட நினைத்தார்கள் ஆனால் பொது மக்களிடம் இருந்து வந்த எதிர்ப்பை தொடர்ந்து அந்த முடிவை கைவிட்டனர், அதே போல அம்மா உணவகத்தில் தற்போது தரம் இல்லாத உணவுகளை வழங்கி வருவதாக கூறினால் ஆதாரத்தை கொண்டு வாருங்கள் என தெரிவிப்பது என்ன நியாயம்.

மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் அதிமுக தற்போது அங்கம் வகித்து வருகிறது, எங்கள் கூட்டணி தொடரும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மாபெரும் வெற்றி பெறுவோம் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Previous articleஅம்மா உணவக தரம் குறித்து எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு! அமைச்சர் கே.என் நேரு பதில்
Next articleஆஸ்கர் விருது வென்ற எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவினருடன் பிரதமர் மோடி சந்திப்பு