30 வருடத்துக்குப் பிறகு மோசமான சாதனை:இந்தியாவின் வொயிட்வாஷ் வரலாறு!
இந்திய அணி 22 ஆண்டுகளுக்கு பிறகு வொயிட்வாஷ் ஆகி மோசமான சாதனையைப் படைத்துள்ளது.
நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று வொயிட் வாஷ் சாதனையை நிகழ்த்தியது. ஆனால் அந்த சந்தோஷத்தின் சுவடு மறைவதற்குள அடுத்த வாரத்திலேயே ஒருநாள் போட்டிகளில் நியுசிலாந்து இந்தியாவை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று வொயிட்வாஷ் செய்துள்ளது.
இந்திய அணியின் மோசமான பீல்டிங் மற்றும் பவுலிங் ஆகியவற்றால்தான் மாபெரும் தோல்வி கிடைத்துள்ளதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இந்திய அணி ஒருநாள் தொடரை முற்றிலுமாக இழப்பது 30 ஆண்டுகளுக்குப் பின் இதுவே முதல் முறையாகும். கோலியின் தலைமையில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் இந்திய அணிக்கு இது மாபெரும் கரும்புள்ளியாக அமைந்துள்ளது.
இதற்கு முன்னதாக இந்திய அடைந்த வொயிட்வாஷ் போட்டிகளின் விவரம் :-
1983-1984 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர். இதில் இந்தியா 0-5 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.
1988/89 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடந்த தொடர். இதிலும் இந்தியா 0-5 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.
அதன் பிறகு தென் ஆப்பிரிக்காவில் நடந்த 2006/07 ஆம் ஆண்டு தொடர். அப்போது முதல் போட்டி மழையால் கைவிடப்பட அடுத்து வந்த 4 போட்டிகளிலும் தோற்ற இந்திய 0-4 என்ற கணக்கில் தோற்றது.
அதையடுத்து நியுசிலாந்துக்கு எதிரான இந்தத் தொடரில் 0-3 என்ற கணக்கில் தோற்றுள்ளது.