Breaking News, Chennai, District News, State

ரயில் நிலையத்தில் பெயர் பலகையில் ஹிந்தியில் எழுதப்பட்ட பெயரை கருப்பு மை கொண்டு அழித்த நபர்கள் மீது போலீசார் வலைவீச்சு!! 

Photo of author

By Rupa

ரயில் நிலையத்தில் பெயர் பலகையில் ஹிந்தியில் எழுதப்பட்ட பெயரை கருப்பு மை கொண்டு அழித்த நபர்கள் மீது போலீசார் வலைவீச்சு!! 

Rupa

Button

ரயில் நிலையத்தில் பெயர் பலகையில் ஹிந்தியில் எழுதப்பட்ட பெயரை கருப்பு மை கொண்டு அழித்த நபர்கள் மீது போலீசார் வலைவீச்சு!!

சென்னை புறநகர் ரயில்கள் அதிகமாக வரக்கூடிய ரயில் நிலையங்களில் கோட்டை ரயில் நிலையமும் ஒன்று தினமும் காலை மாலை வேலைக்கு செல்வோர் என ஏராளமானோர் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த ரயில் நிலையத்தில் இருபுறமும் மஞ்சள் வண்ணத்தில் பெயர் பலகை வைக்கப்பட்டிருக்கும். அந்த பெயர் பலகையில் தமிழ் ஹிந்தி ஆங்கிலம் என மூன்று மொழிகளில் ரயில் நிலையத்தின் பெயரான சென்னை கோட்டை ரயில் நிலையம் என எழுதப்பட்டிருக்கும்

பெயர் பலகையில் ஹிந்தியில் எழுதப்பட்டிருந்த ரயில் நிலையத்தின் பெயரை நேற்று இரவு மர்ம நபர்கள் கருப்பு மை கொண்டு அழித்து இருக்கிறார்கள். இது தொடர்பாக கடற்கரை ரயில் நிலைய போலீசார் ரயில்வே சொத்துக்களை சேதப்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து ரயில் நிலையம் மற்றும் அருகில் உள்ள இடங்களில் இருந்து இந்த செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை சிசிடிவி காட்சிகள் மூலம் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்

மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடத்திற்கான இறுதி முடிவுகள் நீதிமன்ற இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!!

அண்ணாமலை நோக்கத்தை ஓரங்கட்டிய அமித்ஷா!!! கூட்டணி குறித்து பத்திரிக்கையாளர் குபேந்திரன் விளக்கம்…