மாணவர்களுக்கு கையடக்க கணினி திட்டம் இதுவரை வழங்காதது ஏன் ? சட்டப்பேரவையில் அதிமுக கேள்வி

0
199
#image_title

மாணவர்களுக்கு கையடக்க கணினி திட்டம்

இதுவரை வழங்காதது ஏன் ?

சட்டப்பேரவையில் அதிமுக கேள்வி

 

அரசு பள்ளி மாணவர்களுக்கு அதிமுக ஆட்சியில் விலையில்லாத மடிக்கணினி வழங்கப்பட்ட நிலையில், அத் திட்டத்தை நிறுத்திய திமுக அரசு , கையடக்க கணினி வழங்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் , இதுவரை வழங்காத து ஏன் என, சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் கோவிந்தசாமி கேள்வி எழுப்பினார்.

 

பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களில் அதிமுக உறுப்பினர் கோவிந்தசாமி பேசும்போது, அதிமுக ஆட்சியில் காலத்தில் கல்வித்துறைக்காக பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்து செயல்படுத்தப்பட்டன என்றும், குறிப்பாக அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு விலையில்லாத மடிக்கணினி வழங்கப்பட்டன என்றும், ஆனால் திமுக அரசு வந்த பிறகு திட்டம் நிறுத்தப்பட்டு விட்டதாக கூறிய கோவிந்தசாமி, மடி கணிணி திட்டத்திற்கு பதிலாக கையடக்க கணினி வழங்கப்படும் என தெரிவித்திருந்தாலும், இதுவரை வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார். அவை எப்போது வழங்கப்படும் என்றும் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய கோவிந்தசாமி, பள்ளி பாட புத்தகத்தில் ஆன்லைன் ரம்மி குறித்த பாடப்பகுதி இடம்பெற்று இருக்கிறது என்றும், அதை ஏன் நீக்கவில்லை என்றும் பாடப் புத்தகத்தை அவையில் தூக்கி காண்பித்து கேள்வி எழுப்பினார்.

Previous articleஅதிமுக பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட ஆவணங்கள் தேர்தல் ஆனையத்தில் சமர்பிப்பு!!
Next articleஅதிகார ஒடுக்குமுறையை விவரித்துள்ள ‘விடுதலை'”.. வெற்றிமாறனுக்கு திருமாவளவன் பாராட்டு!!