சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி உயர்வு.. மத்திய அரசு அதிரடி!!

0
189
#image_title

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி உயர்வு.. மத்திய அரசு அதிரடி!!

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் தேசிய சேமிப்புச் சான்றிதழ் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது.

அதன்படி ஏப்ரல் 01 முதல் ஜூன்.30 வரையிலான காலாண்டுக்கு மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் மீதான வட்டி 8.0% சதவீதத்திலிருந்து8.2% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல தேசிய சேமிப்புச் சான்றிதழ் சிறு சேமிப்பு திட்டத்தின் மீதான வட்டி 7.0% இருந்து 7.7% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

 

பொது வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி 7.1% ஆக தொடரும் என தெரிவித்துள்ள மத்திய அரசு சுகன்யா சம்ரிதி சேமிப்புத் திட்டத்தின் மீதான வட்டி 7.6% இருந்து 8.0% ஆக உயர்த்தியுள்ளது.

 

மாதாந்திர வருவாய் சேமிப்பு திட்டத்தின் மீதான வட்டி 7.1% இருந்து 7.4% ஆகவும் உயர்த்தியுள்ளது.

ஐந்தாண்டு கால முதிர்வு தொகை கொண்ட தொடர் வைப்பு நிதி மீதான வட்டியும் 5.8% இருந்து 6.2% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஓராண்டு வைப்பு தொகை கொண்ட சிறு சேமிப்பு திட்டத்தின் மீதான வட்டி 6.6% இருந்து 6.8% ஆகவும் இரண்டு சிறு சேமிப்பு திட்டத்தின் மீதான வட்டி 6.8% இருந்து 6.9% ஆகவும் 3 ஆண்டு சிறு சேமிப்பு திட்டத்தின் மீதான வட்டி 6.9% இருந்து 7.0% ஆகவும் ஐந்தாண்டு சேமிப்பு திட்டத்தின் மீதான வட்டி 7.0% இருந்து 7.5% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

Previous articleதார்க் கலவை தரமில்லை…  மீண்டும் சாலையை போடுங்கள்!! ஒப்பந்தராரருக்கு மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவு!!
Next articleதமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு குண்டர் சட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி?