தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு குண்டர் சட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி?

0
168
#image_title

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு குண்டர் சட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி?

வழக்கு சம்ந்தமான முழு விபரங்களையும் அரசு தரப்பில் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை
உத்தரவு.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கணேஷ்குமார் உள்ளிட்ட 3 பேர் கொலை வழக்கில் கைதாகினர். இதில் கணேஷ்குமார் மற்றும் அவரது சகோதரர் குண்டர் சட்டத்தில் கைது செய்யபப்பட்டனர். இதை எதிர்த்து இருவரும் அறிவிரை குழுமத்தில் மனு செய்தனர்.

இதில் கணேஷ்குமார் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை உறுதி செய்தும், இவரது சகோதரர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்தும் அறிவுரை குழுமம் உத்தரவிட்டது.
இதையடுத்து தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி கணேஷ்குமார் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மாநில அறிவுரை குழுமத்தின் நடவடிக்கையை சீராய்வு செய்ய வேண்டியதுள்ளது, அதற்கு நீதிமன்றத்துக்கு உதவ அமிகஸ்கியூரியாக (நீதிமன்றத்துக்கு உதவுபவர்) மூத்த வழக்கறிஞர்களை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

குண்டர் சட்ட உத்தரவுகளுக்கு எதிரான மனுக்களை விசாரிக்கும் மாநில அறிவுரை குழுமம் அரசுக்கு அறிக்கை அனுப்பும் போது அனைத்து ஆவணங்களையும் அனுப்ப வேண்டும். ஆனால் இந்த வழக்கில் அறிக்கை மற்றும் கருத்து மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது. வேறு ஆவணங்கள் அரசுக்கு அனுப்பப்படவில்லை. அறிக்கை என்ற பெயரில் இருவரியில், நான்கு வரிகளில் உத்தரவுகளை அனுப்பும் போது சந்தேகம் ஏற்படுகிறது. இதனால் இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க விரும்புகிறோம்.

அரசு சார்பில் மாநில அறிவுரை குழுமத்துக்கு தனி செயலகம், ஊழியர்கள், ஆவண காப்பகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு ஒன்றிரண்டு ஆவணங்கள் தான் அனுப்பப்படும். மொத்த ஆவணங்கள் காப்பகத்தில் பாதுகாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனால் அறிவுரை குழுமத்தில் அலுவலகம், ஆவணக் காப்பகம், அங்குள்ள ஆவணங்கள் மற்றும் அரசுக்கு எவ்வாறு ஆவணங்கள், அறிக்கைகள் அனுப்பப்படும் என்ற விபரங்களை உள்துறை துணை செயலாளர் தாக்கல் செய்ய வேண்டும்.

மனுதாரர் வழக்கு உட்பட 27 குண்டர் சட்ட உத்தரவுகள் தொடர்பாக அரசுக்கு 7.7.2022-ல் அறிவுரை குழுமத் தலைவர் அறிக்கை அனுப்பியுள்ளார். அந்த 27 வழக்குகளின் பட்டியலையும் தாக்கல் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு குண்டர் சட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதில் எத்தனை வழக்குகளில் அறிவுரை குழுமத்தின் கருத்து பெறப்பட்டுள்ளது? எத்தனை வழக்குகளில் குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது? என்ற விபரங்களையும் அரசு ஏப். 12-ல் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

author avatar
Savitha